Skip to main content

Posts

Showing posts from 2008

உலகம் 2008

உலகம் 2008

செனற்றர் ஓபாம என்று அறியப்பட்ட பராக் ஓபாமா அமெரிக்காவின் முதலாவது கறுப்பின ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.உலக அரங்கில் மாற்றஙகள் நிகழும் என எதிர்பார்பை ஏற்படுத்தியுள்ள பராமவின் “ மாற்றம் “ “எங்களால் முடியும்” என்ற வார்தைகளின் உண்மையான அhத்தம் தேடி என்னைப் போல் பலரும் காத்திருக்கின்றார்கள் 2009 ஆம் ஆண்டின் வருககைக்காய்

இந்த ஆண்டின் கோரம் என அறிவிக்கப்பட்ட சீனாவின் பூமியதிர்ச்சி.மே மாதம் 12ம் திகதி தென் மேற்கு சீனாவில் ஏற்பட்ட பூமியதிர்வில் பலியானவர்களின் எண்ணிக்கை 55000 என்கின்றது சீன அரசு.தனது கணவனையும் மகளையும் தேடி கதறியளும் ஒரு பெண்ணின் சோகம். இது

ஆப்கானிஸ்தானுக்கு கூடுதல் படைகளை அனுப்ப வேண்டும் என்பது அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியின் கொள்கை.ஆப்கானிஸ்தானின் ஹெல்மன் மாகாணத்தில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிரந்த அமெரிக்க மரைன் படைச்சிப்பாய் தலீபான்களின் தாக்குதலில் இருந்து தப்பிக்கும் கணப்பபொழுதில் எடுக்கப்பட்ட புகைப்படம் இது.

உலகளாவிய ரீதியில் ஏற்பட்ட உணவுப் பொருட்களுக்கான விலை ஏற்றம். வசதியற்ற மக்களை மிக மோசமாக பாதித்தது இந்த ஆண்டில் தான்.உணவுக்காக பல நாடுகள் ஏனைய நாட…

புனித பூமியில் ஒரு மனித அவலம்

நத்தார் தினம் உலகம் முழுவதும் கொண்டாடி ஓய்ந்தாகிவிட்ட போதிலும் இறைமகன் யேசு பாலன் பிறந்த பூமி இம்முறை நத்தார் பரிசுகளை பலஸ்தீனத்திற்கு வழங்கத் தீர்மானித்தது.

ஆம் பலஸ்தீனம் மீதான தாக்குதல்களை இஸ்ரேல் மீண்டும் வலிதாக்கியுள்ளது.

கடந்த சனிக்கிழமை முதல் பாலஸ்தீனத்தின் காசா பகுதி மீது நடத்தப்பட்டு வரும் இஸ்ரேலிய தாக்குதல்களில் இதுவரை 300 பேர் வரை உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.700ற்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளார்கள்.

இதுவரை வான்வெளிதாக்குதல்கள் மற்றும் பீரங்கி தாக்குதல்களில் ஈடுபட்டுள்ள இஸ்ரேலிய துருப்புகள் விரைவில் தரைப்படைகள் மூலம் காசா பகுதியை நோக்கி முன்னேற்ற நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாகவும் எச்சரித்துள்ளன.

காசாவில் உள்ள ஹமாஸ் போராளிகளின் நிலைகள் மீதே தாக்குதல் நடத்தி வருவதாக வழமைபோல இஸ்ரேலும் அதன் ஊதுகுழல் ஊடகங்களும் பரப்புரைகளை ஆரம்பித்துள்ளன.

குhசாவில் உள்ள பள்ளி வாசல் மீது இஸ்ரேலிய உலங்கு வானூர்திகள் நடத்திய தாக்குதலில் 5 இளம் பெண்கள் பலியாதை தான் நேரில் கண்டதாக காசாவில் செயல்பட்டு வரும் தன்னாhவ பணயியாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்

இஸ்ரேலிய விமானாத் தாக்குதல்களில் இருந்து உயி…

ஓலி(வாங்கி)யால் எழுதும் (என்) கதை

எனக்கான அடையாளம் சூரியனாகத்தான் இப்போதும் இருக்கின்றது.1999 முதல் இன்று வரை சூரியனோடு வேறு வேறு தளங்களில் இயங்கிக் கொண்டிருப்பதால் மட்டுமன்றி எனது வாழ்கையின் பல்வேறு கால கட்டடங்களை தீர்மானிக்கும் சக்தியாகவும் சூரியன் தான் இருந்திருக்கின்றது.இரண்டு தீர்வுகளின் சந்திப்பு புள்ளியாக சூரியன் மாறிப்போனது.

சிறுவயது முதலே ஒலிவாங்கி மீதான காதல் எனக்குள் கூடுகட்டியிருந்தது.
ஒலிபரப்பு,அறிவிப்பு, வானொலி … என இவை எவை குறித்த தார்பரியங்களும் விபரங்களும் அறியாத வயதில் எனக்கும் ஒலிவாங்கிக்கும் இடையில் ஏற்பட்டிருந்த பிணைப்பு அது.

எங்கள் ஓர் கோவில் திருவிழாவில் வருடா வருடம் நடைபெறும் இசை நிகழ்ச்சிகள் தான் இந்த காதலின் தொடக்கப்புள்ளியாக இருந்தன.
அருணா இசைக் குழு,கவிதாலாய, ராஜன்ஸ் என யாழ்பாணத்தில் புகழ்பூத்த இசைக் குழுக்களையெல்லாம் எங்கள் ஊர் மண் வாசத்தை சுவைத்தபடி இரசித்திருக்கிறேன்.

ஒவ்வொரு பாடலின் ஆரம்பத்திலும் அந்த பாடலை அறிமுகம் செய்ய அறிவிப்பாளர் மேடை ஏறுவார் அந்த பாடல் பற்றிய ஒரு அறிமுகம் பாடகர் அறிமுகம் என கம்பீரக் குரலில் அவர்கள் செய்யும் அறிவிப்புகளில் மயங்கி கிறங்கி கிடந்த வயது அது.

ஒலிபெருக்கிகள்…

Happy Christmas

வாழும் காலம்

வாழ்க்கையின் ஒவ்வொரு நொடிப்பொழுதும் இனிமையானது.எதாவது ஒரு அதிசயத்தை எமக்குள் ஏற்படுத்தி விடுகின்றது.கடந்து போன கணப்பொழுதுகள் இனி எப்போதும் எமக்கு கிடைப்பதில்லை.இது உணரப்படும் பொழுது வாழ்ககை அர்த்தம் நிறைந்ததாகின்றது..வாழ்வின் கடந்து போன கணப்பொழுதுகளை கவனமாக சிறைப்படுத்திய அந்த புகைப்படக் கருவிகளுக்கும் அதை இயக்கிய கைகளுக்கும் நன்றிகள்
வணக்கம் நண்பர்களே

வலைப்பதிவு உலகில் இணைந்து கொள்வதில் மகிழ்ச்சி.
மாற்றங்களை வேண்டி நிற்க்கும் உலகம்,புரிவதற்கும் தெரிவதற்கும் ஏராளமாய் இருக்க எழுதுவதற்கு எதுவும் இல்லாமல் போய்விடாது என்ற நம்பிக்கையில் என் பயணம்.எதை எழுதுவது எதை தவிர்ப்பது என்று மனது தணிக்கை செய்து இருப்பிற்கு பழுதில்லாமல் இந்த தளத்தில் இயங்குவதே இப்போதைய எதிர்பார்ப்பு.
நட்புடன்
ரமணன்