Skip to main content

புனித பூமியில் ஒரு மனித அவலம்

நத்தார் தினம் உலகம் முழுவதும் கொண்டாடி ஓய்ந்தாகிவிட்ட போதிலும் இறைமகன் யேசு பாலன் பிறந்த பூமி இம்முறை நத்தார் பரிசுகளை பலஸ்தீனத்திற்கு வழங்கத் தீர்மானித்தது.

ஆம் பலஸ்தீனம் மீதான தாக்குதல்களை இஸ்ரேல் மீண்டும் வலிதாக்கியுள்ளது.

கடந்த சனிக்கிழமை முதல் பாலஸ்தீனத்தின் காசா பகுதி மீது நடத்தப்பட்டு வரும் இஸ்ரேலிய தாக்குதல்களில் இதுவரை 300 பேர் வரை உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.700ற்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளார்கள்.

இதுவரை வான்வெளிதாக்குதல்கள் மற்றும் பீரங்கி தாக்குதல்களில் ஈடுபட்டுள்ள இஸ்ரேலிய துருப்புகள் விரைவில் தரைப்படைகள் மூலம் காசா பகுதியை நோக்கி முன்னேற்ற நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாகவும் எச்சரித்துள்ளன.

காசாவில் உள்ள ஹமாஸ் போராளிகளின் நிலைகள் மீதே தாக்குதல் நடத்தி வருவதாக வழமைபோல இஸ்ரேலும் அதன் ஊதுகுழல் ஊடகங்களும் பரப்புரைகளை ஆரம்பித்துள்ளன.

குhசாவில் உள்ள பள்ளி வாசல் மீது இஸ்ரேலிய உலங்கு வானூர்திகள் நடத்திய தாக்குதலில் 5 இளம் பெண்கள் பலியாதை தான் நேரில் கண்டதாக காசாவில் செயல்பட்டு வரும் தன்னாhவ பணயியாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்

இஸ்ரேலிய விமானாத் தாக்குதல்களில் இருந்து உயிர் தப்ப எகிப்பதிய எல்லை நோக்கி ஓடிய பொதுமக்களi எகிப்திய படைகளின் சுடுகலன்கள் தான் வரவேற்றுள்ளன.
ஏகிப்பதிய படைகளின் தாக்குதலில் தஞ்சம் கேட்டு ஒடிய பொதுமகன் ஒருவர் பரிதாபகரமாக செத்து விழ ஏனையவர்கள் மீண்டும் காசா நோக்கி திரும்பி சென்றுள்ளனர்.

தந்போது எங்கும் தப்பிச் செல்ல முடியாத மக்கள் சாலை அணைக்க காத்திருக்கின்றார்கள்.


வழமைபோலவே ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை காசாவில் அனைத்து விதமான வன்முறைகளையும் முடிவிற்கு கொண்டு வருமாறு “எல்லோருக்கும்” அனுப்பி வைக்கும் கோரிக்கையை அனுப்பி விட்டு அமைதியடைந்திருக்கின்றது.

செத்துப்போகின்றவர்கள் அமெரிக்கர்களாக அல்லாதவிடத்து கடுமையான நடவடிக்கைகள் எவையும் எங்கும் எடுக்கப்படமாட்டாது என்ற உலக பொதுவிதிக்கு அமைவான நடவடிக்கை தான் இது என்பது அனைவருக்கும் தெரியும்.

கடந்த சனிக்கிழமை முதல் காசாவில் இருந்து இஸ்ரேலிய எல்லைக்குள் 110 உந்துகணைகள் ஏவப்பட்டுள்ளதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது ஆனால் அதில் ஏற்பட்ட சேதங்கள் எவையும் வெளியாகவில்லை.

6 மாதங்கள் அமைதி காத்த அமைதி ஒப்பந்தம் காலவதியாகி ஒருவாரத்தினுள் இத்தனை அனர்தங்களும் அங்கு நடந்தேறியிருக்கின்றன.

24 மணித்தியாலத்தில் அடையாளம் காணப்பட்ட 210 இலக்குகள் மீது தாங்கள் தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேலிய பாதுகாப்பு தரப்பினர் அறிவித்துள்ளனர்.

ஹமாஸ் எதிர்பாரத பொழுதில் அதன் தலைமையகம் மீது அதிர்ச்சி தாக்குதல் நடத்தியுள்ளோhம் இது வெறும் ஆரம்பம் தான் களநலவரங்களின் போக்கிற்கு அமைவாக போரியல் யுக்திகள் மாறுபடும் ஹமாhஸ் இயக்கம் அழிக்கப்படும் வரை தாக்குதல் தொடரும் என இஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சர் லிவ்னி கூறியுள்ளார்.


இஸ்ரேலுடனான மோதலட தவிர்ப்பு ஒப்பந்தம் காலவதியானதை தொடர்ந்து ஹமாஸ் போராளிகள் வலிந்த தாக்குதல்களை ஆரம்பித்தமையே இந்த அவல நிலைக்கு காரணம் என்பதனை கண்டறிந்த அமெரிக்கா இதனை கண்டிப்பதாக அறிக்கை வெளயிட்டுள்ளது.

காசவில் உள்ள பலஸ்தீன மக்களை அங்கிருந்து வெளியேறுமாறும் அவர்களுக்கும் தமக்கு எந்தவிதமான பகையுமில்லை என்று இஸ்ரேலிய பிரதமர் ஏகூட் ஒல்மட் அறிவித்துள்ளார்

பலஸ்தீன மக்களை ஹமாஸ் அமைப்பு கேடயமாக பயன்படுத்தி வருவதாகவும் எனினும் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தாங்கள் அடையாளம் காணப்பட்ட இலக்குகள் மீது மட்டுமே தாக்குதல்களை நடத்தி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.(அங்கேயுமா ?)

1967ல் ஆரம்பித்த ஆக்கிரமிப்பிற்றான ஆவல் இன்னும் இஸ்ரேலிடம் இருந்து விலகவில்லை. பலஸ்தீன விடுதலைப் போராட்டம் ஏன் ?எதற்கு ? எப்படி ? விரைவில்

Comments

Popular posts from this blog

காலம் கடந்த நீதி - யுத்தக் குற்றவாளிகளுக்கு எதிரான யுத்தம்

நெதர்லாந்தின் ஷெவனிங்கன் நகரம் வழமைக்கு மாறான பரபரப்புடன் காணப்பட்டது.இந்த நகரத்தில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் சிறைச்சாலைச் சூழல் ஊடகர்களாலும் பொதுமக்களாலும் நிறைந்திருந்து. வானத்தில் பறந்த வெளிர்நீல உலங்கு வானூர்த்தி அதன் இரைச்சலை விடவும் அதிகமான மக்களின் இரைச்சலின் மத்தியில் தரையிறங்கியது.
உலகம் 16 வருடங்களாக வலைவிரித்துத் தேடிய ஒருவர் அந்த உலங்கு வானூர்த்தியில் அழைத்து வரப்பட்டமை தான் அந்த பரபபரப்பான சூழ்நிலைக்கு காரணம்.
அவரின் பெயர் ஜெனரல் ரட்கோ மெலடிச் - பொஸ்னியாவில் 95 ஆம் ஆண்டு சுமார் 7500 முஸ்லீம்களை படுகொலை செய்வதற்கு காரணமானவராக கருதப்படுபவர் தான் இந்த மெலடிச்.

வடக்கு சேர்பியாவின் லாசாரெவு என்ற கிராமத்தில் வைத்து கடந்த 16ம் திகதி சேர்பிய பொலிசாரால் கைது செய்யப்பட்ட ஜெனரல் மெலடிச் சர்வதேச போர்க்குற்றவியல் நீதிமன்ற விசாரணைகளுக்காவே நெதர்லாந்திற்கு நாடு கடத்தப்பட்டுள்ளார்.

இரண்டாவது உலக மகா யுத்தத்தின் பின்னர் ஐரோப்பாவில் இடம்பெற்ற பாரிய இன அழிப்பின் சூத்திரதாரிகளில் ஒருவராக மெலடிச் கருதப்படுகின்றார்.

பொஸ்னிய படுகொலைகள் என அழைக்கப்படும் இன அழிப்பினை நேரடியாக வழிநடத்தியவர் அவர் என …

நான் .. ஊடகம் .... இன்னும் சில...

இது எனது 50வது பதிவு, மிக மிக நீண்ட கால இடைவேளைகளை எனது பதிவுகள் எடுத்துக் கொள்வதால் சுமார் மூன்று வருடங்களில் என்னால் 50 பதிவுகளையே எழுதி கிழிக்க முடிந்துள்ளது. இந்த பதிவு என்னை பற்றியதும் எனது ஊடகப் பயணம் பற்றியதும் மட்டுமே.

99ம் ஆண்டு முழு நேர ஒலிபரப்பு ஊடகவியலாளனாய் எனது பயணம் ஆரம்பித்தது. 12 வருடங்கள் ஊடகப்பரப்பில் வெவ்வேறு தளங்களில் பயணித்திருக்கின்றேன். ஒலிபரப்பளான், செய்தியாளன், விளம்பரப் பிரதி எழுத்தாளன், பத்திரிகை உதவி ஆசிரியர், செய்திப் பணிப்பாளர், நவீன ஊடக முகாமையாளர் என வெவ்வேறு பணிகளில் ,பணிச் சூழல்களில் இயங்கி வந்துள்ளேன்.

இந்த பயணம் நானாகவே விரும்பி ஏற்றுக் கொண்ட பயணம். துயரங்கள், துரோகங்கள், காட்டிக் கொடுப்புகள் கழுத்தறுப்புகள் என பல முனைக்கத்திகள் குத்திக் கிழிக்க காத்திருக்கும் ஊடகத்துறையில் நான் எவரையும் எந்த சந்தர்ப்பத்திலும் எதற்காகவும் காயப்படுத்தாமல் முன் நகர்ந்திருக்கின்றேன் என்பதையே பெருமையாகவும் மகிழ்வாகவும் கருதுகின்றேன். சில சந்தரப்பங்களில் சந்தர்ப்பவாதங்கள் என்னை பந்தாடிய போதும் என்னால் எவரும் பாதிக்கப்படக் கூடாது என்ற கொள்கையில் மாற்றமின்றி நிலைத்திரு…

ஓலி(வாங்கி)யால் எழுதும் (என்) கதை

எனக்கான அடையாளம் சூரியனாகத்தான் இப்போதும் இருக்கின்றது.1999 முதல் இன்று வரை சூரியனோடு வேறு வேறு தளங்களில் இயங்கிக் கொண்டிருப்பதால் மட்டுமன்றி எனது வாழ்கையின் பல்வேறு கால கட்டடங்களை தீர்மானிக்கும் சக்தியாகவும் சூரியன் தான் இருந்திருக்கின்றது.இரண்டு தீர்வுகளின் சந்திப்பு புள்ளியாக சூரியன் மாறிப்போனது.

சிறுவயது முதலே ஒலிவாங்கி மீதான காதல் எனக்குள் கூடுகட்டியிருந்தது.
ஒலிபரப்பு,அறிவிப்பு, வானொலி … என இவை எவை குறித்த தார்பரியங்களும் விபரங்களும் அறியாத வயதில் எனக்கும் ஒலிவாங்கிக்கும் இடையில் ஏற்பட்டிருந்த பிணைப்பு அது.

எங்கள் ஓர் கோவில் திருவிழாவில் வருடா வருடம் நடைபெறும் இசை நிகழ்ச்சிகள் தான் இந்த காதலின் தொடக்கப்புள்ளியாக இருந்தன.
அருணா இசைக் குழு,கவிதாலாய, ராஜன்ஸ் என யாழ்பாணத்தில் புகழ்பூத்த இசைக் குழுக்களையெல்லாம் எங்கள் ஊர் மண் வாசத்தை சுவைத்தபடி இரசித்திருக்கிறேன்.

ஒவ்வொரு பாடலின் ஆரம்பத்திலும் அந்த பாடலை அறிமுகம் செய்ய அறிவிப்பாளர் மேடை ஏறுவார் அந்த பாடல் பற்றிய ஒரு அறிமுகம் பாடகர் அறிமுகம் என கம்பீரக் குரலில் அவர்கள் செய்யும் அறிவிப்புகளில் மயங்கி கிறங்கி கிடந்த வயது அது.

ஒலிபெருக்கிகள்…