Skip to main content

Posts

Showing posts from 2009

இந்தியா எதிர் சீனா , இலங்கையில் அடுத்த இனிங்ஸ் ஆரம்பம்.

உலகப் பொருளாதாரத்தில் இலாபகரமான வர்தகங்களில் ஆயுத வியாபாரமும் மருந்து பொருட்களும் முதன்மை வகிக்கின்றன.

ஓன்று மனித இனத்தை அழிப்பதற்கும் மற்றையது மனித இனத்தை அழிவுகளில் இருந்து காப்பதற்குமான துறைகள் என்பது முரண்நகையானது.இரண்டு துறைகளினதும் தாக்கங்கள் அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளில் அதிகம் இருப்பதை கடந்த காலங்கள் எமக்கு தெளிவு படுத்தி நிற்கின்றன.

அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளில் நிலவும் போர்சூழலின் பின்னணியில் ஆயுதங்களை உற்பத்தி செய்யும் நாடுகளின் நிழல் கரங்கள் எப்போதும் இருந்து வருகின்றன.

அதேபோலவே மருந்துப் பொருட்களின் உச்ச பாவனை அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளையே சார்ந்து இருக்கின்றது.

இந்த நாடுகள் அபிவிருத்தி அடைந்த நாடுகளாக மாற முடியாதபடிக்கு அபிவிருத்தி அடைந்த நாடுகள் காண்பித்து வரும் “அதீத அக்கறையின்” பின்னணியில் அவர்களின் ஆயுதங்களும் மருந்துகளும் மறைந்திருப்பது புரிதலுக்குரியது.

ஆயுத வர்த்தக போட்டிகளில் அபிவிருத்தி அடைந்த நாடுகளின் ஈடுபாடானது எந்த ஒரு நாட்டிலும் மோதலில் ஈடுபடும் இரு தரப்புகளுக்கான வெளி ஆதரவாக விரிவடையும்.
வெளிப்படையாக மோதல்கள் மனித உரிமை மீறல்கள் குறித்து கவலைப்…

ஊடக மயக்கங்களும் மருந்துகளும்

அண்மை நாட்களில் என் துறை சார்ந்த இரண்டு விடயங்கள் அதிக ஈர்ப்பினை ஏற்படுத்தி விட்டுள்ளன. ஓன்று “இருக்கிறம்: சஞ்சிகையில் வெளியான கட்டுரை மற்றையது வெற்றியில் ஒலிபரப்பான வானொலி ஒன்றிற்கான மடல்.

இரண்டுமே இலத்திரனியல் ஊடகங்களின் போக்குகள் குறித்த சமகால விமர்சனப் போக்குகளின் அடிப்படையில் நோக்கப்படக் கூடியவை. இவை இரண்டினதும் படைப்பாளிகள் வேறுபட்ட தளங்களில் இருந்து தமது விமர்சனங்களை முன்வைக்க முற்பட்ட போதிலும் இரண்டு விமர்சனங்களினதும் பொதுத் தன்மையானது இலத்திரனியல் ஊடகங்களின் மீதான ஆதங்கங்களையே வெளிப்படுத்தியுள்ளன.
“இருக்கிறம”; கட்டுரையில் கட்டுரையாளர் முன்வைத்த பல குற்றச்சாட்டுகளை என்னால் முற்றாக நிராகரிக்க முடியவில்லை ஆனால் அந்த கட்டுரை மீதான ஊடகத்துறை நண்பர்களின் முக்கிய எதிர்பிற்கு காரணம் அந்த கட்டுரையாளர் பற்றியதாகவே எழுகின்றது.

அவர் கூறிய விடயங்களை தவிர்த்து அவர் யார் ? அவரின் பின்னணி என்ன ? அவர் இந்த கட்டுரையை எழுத காரணம் என்ன என்பது போன்ற வாதங்கள் அதிகம் முன்வைக்கப்படுகின்றது.
இரு தடவைகள் அந்த கட்டுரையை வாசித்துப் பார்த்தேன் நான் கடந்த 10 வருடங்களாக இயங்கிக் கொண்டிருக்கும் ஊடகத் துறை சார…

சத்தம் இன்றி ஒரு புரட்சி – பரியோவான் கல்லூரி சாதனைகளின் சிகரத்தில்

இலங்கையில் நடைபெற்று முடிந்த யுத்தம் ஏற்படுத்தி நிற்கும் காயங்கள் ஆறுவதற்கு காலங்கள் பலவாகும்.

யுத்தத்தை நேரடியாக தரிசித்த சுமார் மூன்று இலட்சம் உறவுகளிடம் சொல்வதற்கு கதைகள் ஏராளம் இருக்கும் அவை காலத்தின் காதுகளில் எப்போது சொல்லி வைக்கப்படும் என்பது உங்களை போலவே எனக்கும் தெரியாதது தான்…

ஆனால் இழப்புகளில் இருந்து மீண்டெழும் மந்திர வித்தை தெரிந்தவர்கள் நாங்கள்.எங்களை சுற்றியுள்ள தடைகள் தகரும் போது நாங்கள் இழந்த வாழ்வை மீண்டும் பெறமுடியும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கைகள் எங்களிடம் நிறையே உண்டு.

அதுவரைக்கும் உடலிலும் உள்ளத்திலும் ஏற்பட்ட காயங்களுக்கு மருந்தாக வேண்டியது எங்களின் கட்டாய கடமை.

இது அது போன்ற ஒரு காயத்திற்கு மருந்தாகும் முயற்ச்சி பற்றியதான கதை தான் இது.
யாழ்ப்பாணத்தின் கல்வி சமூகத்தின் வளர்ச்சியல் தவிர்க்க முயடிhத அங்கங்களில் ஒன்று புனித பரியோவான் கல்லூரி.

யாழ்ப்பாணத்தில் இயங்கும் தனியார் பாடசாலைகளில் மிக முக்கியமானது இந்த கல்லூரி.

தேசங்கள் தாண்டியும் தமிழர்களின் திறமைகள் பரவும் வழி வகை செய்து நிறகின்றது இந்த பாடசாலை.

ஆளுமை மிக்க மனிதர்களை உற்பத்தி செய்தும் ஒரு உற்பத்தி சாலை என்று இத…

மீண்டும் வாழ்வோம்….

அடிக்கடி வலைப்பூவின் பக்கம் என்னை எட்டிப்பார்க்க விடாமல் செய்யும் வேலைப் பழுவின் பெயர் தான் “மீண்டும் வாழ்வோம்”.

மீண்டும் வாழ்வோம் எனக்கு சுகமான ஒரு சுமை.கடந்த இரண்டு வருடங்களாக நான் இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு வித்தியாசமான ஊடக செயல்பாடு தான் இந்த மீண்டும் வாழ்வோம்.

கண்ணீரும் வேதனைகளும் சொந்த மண்ணியின் துயர நினைவுகளும் சுமந்து இடம்பெயர்ந்த எங்கள் உறவுகளின் துயர் துடைக்கும் ஒரு சிறு முயற்ச்சிதான் இந்த மீண்டும் வாழ்வோம்.

இந்த திட்டம் பற்றி நிறையவே பதிவுகளில் எழுத வேண்டும் என்று எத்தனையோ தடவைகள் முயற்சித்தும் முடியாமல் போய்விட்டது.

இம்முறை இதனை எப்படியேனும் ஒரு பதிவேனும் உறுதியுடன் தான் இதனை தட்டச்சுகின்றேன்.

அமெரிக்க அரசாங்கத்தின் நிதி உதவியுடன் இன்ரநியுஸ் நெட் வேர்க் எனப்டும் அரச சார்பற்ற அமைப்பினால் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.
வாராந்த பத்திரிகை மற்றும் தினசரி வானொலி நிகழச்சிகளென இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடக தளங்களில் ஒன்றாக பயணிக்கும் வாய்ப்பினை இந்த திட்டம் வழங்கியுள்ளது.

ஓலிபரப்பு ஊடகவியலாளனாய் என்னை வளப்படுத்தவும் இதழியல் துறையின் அறிவினை பெறவும் இது துணை செய்கின்றது.

மறுபு…

நன்றி மயூரன் - எனக்கும் ஒரு விருது வழங்கியமைக்கு

அண்மை நாட்களாக வலைப்பூ உலகில் வலம் வரும் விருதுகளில் ஒன்றான சுவாரசிய பதிவருக்கான விருது எனக்கும் வழங்கப்பட்டுள்ளது.எனது தலைமுறை ஒலிபரப்பாளர்களில் ஒருவரும் வலைப்பூ பதவிவாளருமான மயூரன் கனகராசாவினால் இந்த விருது எனக்கு வழங்கப்பட்டுள்ளது

மயூரன்! எனக்கு சுவாரசிய பதிவருக்கான விருதினை வழங்கியமைக்கு எனது இதயம் நிறைந்த நன்றிகள்.

இந்த விருதிற்கு தகுதியானவனா என்ற சந்தேகம் பதிவுலக நண்பர்கள் பலரைப்போலவே எனக்கும் இருக்கின்றது.

இருந்தாலும் உங்கள் விருதை மனமகிழ்வோடு ஏற்றுக் கொள்கின்றேன்.
உண்மையில் வலைப்பதிவில் எதனையும் பேசிவிடமுடியும் என்ற போதிலும் இடம் பொருள் ஏவல் அறிந்து அடக்கி வாசிக்க வேண்டியேயுள்ளதால் இன்னும் என்னளவில் நான் முழுமையான பதிவுகளை வழங்கவில்லை என்ற ஆதங்கம் எனக்கு உண்டு.

அதைவிடவும் தொடர்ச்சியாக பதிவுகளை வழங்கும் பழக்கமும் என்னிடம் கிடையாது.

உண்மையில் சராசரியாக ஒவ்வவொரு நாளும் பதவிவிடும் நண்பர்களை பார்க்க ஆச்சரியமாகவும் பொறமையாகவும் இருக்கின்றது.

ஒரு வாரத்திற்கு ஒரு பதிவு போடவே எனக்கு நாக்கு தள்ளிவிடுகின்றது.
இத்தனைக்கும் தமிழ் தட்டச்சு எழுத்துப்பிழைகளுடன் கூட கொஞ்சம் விரைவாகவும் செய்யக் கூடியவன…

பன்னிரண்டாவது வருடத்தில் சூரியன்....

நேற்று போல் தான் இருக்கின்றது ஆனாலும் 11 வருடங்கள் உருண்டோடி முடிந்து விட்டது.சூரியன் தனது ஒலிக்கரங்கள் கொண்டு தமிழ் பேசும் நெஞ்சங்களை அரவணைக்க ஆரம்பித்து 11 ஆண்டுகள் நிறைவடைகின்றது.எத்தனை சாதனைகள் எத்தனை வேதனைகள் அத்தனையும் தாண்டி இன்றும் மக்கள் மனங்களில் தனித்துவமான அடையாளத்தோடு நிமிர்ந்து நிற்கின்றான் சூரியன்.

உலக வர்த்தக மையத்தின் 35வது தளத்தில் இருந்து இலங்கை முழுவதற்கும் தமிழ் பரப்பும் வானொலியின் 11 வருடம் என்பது தமிழ் பேசும் மக்கள் அனைவரும் பெருமை கொள்ளத்தக்கது.இலங்கையின் முதன் முதலாக 24 மணி நேர தமிழ் ஒலிபரப்பை ஆரம்பித்த தனியார் ஒலிப்பரப்பு ஊடகம் சூரியன்.

வானொலி மீதான மக்களின் அவதானிப்பு குறைவாக இருந்த காலத்தில் ஒரு புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்தியது சூரியன் என்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்துக்கள் இருக்க முடியாது.வானொலிக்கென வகுக்கப்பட்ட சம்பிரதாயங்களை உடைத்து ஒரு மாற்றத்தை தமிழ் ஊடகப் பரப்பில் ஏற்படுத்திக் காட்டியது சூரியன்.

தமிழ் ஒலிபரப்பு துறையின் தாயகமான இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் பல வருடங்கள் பணியாற்றிய பழுத்த ஒலிபரப்பாளர் நடராஜசிவம் தலைமையில் புதிய இளைஞர்கள் க…

ஓலிவாங்கியால் எழுதும் என் கதை - பாகம் 05

சூரியன் செய்திகளும் நானும்.

அறிவிப்பாளன் என்ற நிலையில் இருந்து என்னை ஒலிபரப்பு ஊடகவியலாளனாக்கிய இடம் சூரியனின் செய்திப்பிரிவு.எனது ஊடகத்துறை ஆற்றல்களை இனம்கண்டு அவற்றை புடம் போட்டது இந்த இடம் தான்.

இன்றும் ஒலிபரப்பு ஊடவியலாளனாய் நான் பணியாற்றுவதற்கு காரணம் சூரியன் செய்திப்பிரிவு எனக்கு வழங்கிய பயிற்ச்சி தான்.

ஊடகத்துறையில் எனக்கு அகரம் சொல்லிக் கொடுத்த பள்ளிக்கூடம் அது.செய்தி வாசிப்பாளனாக மட்டும் என்னை கருதாது தங்களில் ஒருவனாய் கருதிய சூரியன் செய்திப்பிரிவனருக்கு என்றும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள் உரித்தடையவை.
தமிழ் பேசும் மக்கள் மத்தியில் செய்திகளுக்காகவே சூரியன் பிரபல்யம் பெற்றிருந்ததை எவரும் மறந்திருக்க முடியாது.

அந்த வேளையில் முக்கியம் மிக்க செய்தி அறிக்கைகளில் ஒன்றான சூரியனின் இரவுச் செய்திகளை வாசிக்கும் வாய்ப்பு எனக்கு வழங்கப்பட்டது.

இலங்கை முழுவதிலும் வாழும் தமிழ் பேசும் மக்களின் பரவலான அவதானிப்பை நான் பெறுவதற்கு சூரியனின் இரவுச் செய்திகளை வாசிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தமை தான் காரணம் அந்த வாய்ப்பினை எமது நிகழ்ச்சி பொறுப்பதிகாரி நடா அண்ணா.

அந்த வாய்பை உரிய முறையில் பயன்படுத்தி செய…

பதிவின் பதிலும் பதிவும் - இசையமைப்பாளர் ராஜின் எண்ணங்கள்

இன்று சூரியனில் எனது ஆரம்ப நாட்கள் நிகழ்ச்சி மாற்றங்கள் சூரியனின் ஆரம்ப கால அறிவிப்பாளர்கள் பற்றிய ஒரு பதிவினை எழுதவதற்கு தீர்மானித்திருந்தேன்.
எனினும் ராஜ் எழுதிய 3 தொடர் பின்னூட்டங்கள் அந்த எண்ணத்தை மாற்றி விட்டன.எனது அனுபவங்கள் மற்றும் ஆதங்கங்கங்களை பகிர்ந்து கொள்வதற்காக தான் இந்த பதிவு தொடரை ஆரம்பித்தேன்.அதில் எங்கள் கலைஞர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்காதமைக்கான காரணங்கள் என என் மனதில் பட்டவற்றை பதிவு செய்தேன்.அந்த பதிவின் பின்னூட்டத்தில் நண்பர் லோசனும் நடைமுறை சவால்கள் குறித்து பின்னூட்டமிட்டடிருந்தர்.
இது குறித்து இசையமைப்பாளர் ராஜ் தனது எண்ணங்களை நீண்ட பின்னூட்டமாக வழங்கியிருக்கின்றார்.
அதனை பின்னூட்டமாக வைத்திருப்பதை விடவும் பதிவாக்குதல் பொருத்தமானது என்று கருதுகின்றேன்.பின்னூட்டங்களை பார்க்க தவறியவர்களுக்காக..
இனி ராஜின் கருத்துக்கள்...எல்லோருக்கும்எனதுநன்றிகள் :)ரமணன் , லோஷன் ... இந்த வாதத்தில் நானும் எனது கருத்துகளை பரிமாற்ற விரும்புகிறேன் . சரியா ,தவறா என்று எனக்கு தெரியாது .. இது எனக்குப் பட்டது ...

//முடியுமானவரை உள்ளூர் பாடல்களை வழங்கினாலும் எதிர்பார்த்தளவு அவை ஹிட் ஆவதில்…

ஓலிவாங்கியால் எழுதும் என் கதை - பாகம் 04

அன்புள்ள நண்பரே

நான் சூரியனில் இணைந்து கொண்ட முதல் நிகழ்ச்சி இது.

சூரியனில் அறிவிப்பாளராவதற்கு சில மாதங்கள் முன்பாக ஒரு இரவுப் பொழுதில் ரவூபின் நேற்றைய காற்றை கேட்டு முடித்த பின் முகுந்தனும் சர்தாரும் தொகுத்தளித்த அன்புள்ள நண்பரே நிகழ்ச்சியை எதேச்சையாக கேட்க நேர்ந்தது.

அன்று படித்துச் சுவைத்த அம்சங்களை பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

பல முறைகள் முயன்று நிகழ்ச்சி முடிவடைவதற்கு சில நிமிடங்கள் முன்பாக அழைப்பு கிடைத்தது.

மறு முனையில் முகுந்தன் என்ன சொல்லப் போகின்றீர்கள் ? ஒரு கடி ஜோக் கொஞ்சம் பெரிய ஜோக் சொல்லவா சரி என்று அழைப்பை வானொலிக்கு மாற்றினார்.

உங்கள எல்லோருக்கும் தெரிந்த நகைச்சுவை தான் இருந்தாலும் ..மீண்டும் ஒரு முறை எனக்காக

ஒரு ஒட்டகச்சிவிங்கியை; மூன்று படிமுறைகளின் மூலம் குளிர்சாதனப் பெட்டியில் வைக்க வேண்டும் ..

முகுந்தன் - தெரியாது நீங்களே சொல்லுங்கள்நான் -

படி ஒன்று – குளிர்சாதனப் பெட்டியின் கதவை திறத்தல்
படி இரண்டு – ஒட்டகச்சிவிங்கியை உள்ளே வைத்தல்
படி மூன்று – குளிர்சாதனப் பெட்டியின் கதவை மூடுதல்முகுந்தன் - இதில் என்ன கடி இருக்கின்றது..
நான் - இன்னும் கதை முடியவில்லை இப…