Skip to main content

மூட நம்பிக்கைகளின் உலகம்

என்ன தான் செவ்வாய்கிரகத்தில் ஆராச்சிகள் ஆரம்பித்திருந்தாலும் மூட நம்பிகைளிலும் சாத்திரங்களிலும் உலகம் கொண்டுள்ள நம்பிக்கை குறைவின்றி தொடர்கின்றது.

உலக வல்லரசுக்கான போட்டியில் அமெரிக்காவின் வல்லாதிக்கத்தை உடைப்பதற்கு போராடும் சீனா பல முன்மாதிரிகளை உலகுக்கு தந்திருந்தாலும் மூட நம்பிக்கைகளிலும் தான் சளைக்கவில்லை என்று நிரூபித்து வருகினறது
சீனாவின் பெங் சுயி சாத்திர முறையில் இந்த வருடம் (2009)“எலி” வருடமாக குறிப்பிடப்பட்டுள்ளது.


கடந்த வருடம் “பன்றி” வருடமாம்.என்ன கொடுமை சார் இது.சீனர்களின் உணவில் அடங்காத வாயில்லா ஜீவன்களே இல்லை என்று பாhத்தால் அவர்கள் ஜாதகமே மிருகங்களிடம் தான் இருக்கின்றது

எருது,புலி,முயல்,ட்ரகன்,பாம்பு,குதிரை,ஆடு,குரங்கு,சேவல்,நாய்,பன்றி,எலி என 12 விலங்குகளின் பெயர்களில் சீனர்கள் தமது ஆண்டுகளை வகுத்துள்ளனர்.
இந்த வருடம் சீனாவிற்கு போகின்றவர்களுக்கு எலிக்கறி இலவசமா என்று என்னை கேட்டகாதீர்கள்.


எலி வருடம் பற்றி சுவாரசியமான அனுபவங்கள் இருக்கின்றன,இதற்கு முன்னை எலி வருடம் 1996ம் ஆண்டு.

அந்த ஆண்டில் 20 விமான விபத்துக்கள் உலகளாவிய ரீதியில் இடம்பெற்றிருக்கின்றனவாம் அதில் அத்திலாந்திக் சமுத்திரத்தில் விபத்துக்குள்ளாகி 230 உயிர்களை பறித்த போயிங் விமான விபத்தும் அடங்குகின்றது.

இதைவிட எலி நாட்கள் கூட முக்கியம் பெறுகின்றன 1920ம் ஆண்டு இடம்பெற்ற டைட்டானிக் கப்பல் விபத்தில் நூற்றுக்கணக்கான உயிர்கள் பறிக்கப்படது ஒரு எலிநாளில் தானாம் அதேபோல் 2004ல் ஏற்பட்ட சுனாமியும் எலிநாளில் ஏற்பட்டதாக சீன சாத்திரம் கூறுகின்றது.

ஆக மொதத்தில் இந்த வருடம் எலி வருடம் நீராலும் இயற்கையின் சீற்றத்தாலும் பாரிய அழிவுகளை சந்திக்கும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது
(ஐயோ இந்த வருடம் தண்ணியில கண்ணடம் என்று ரமணன் பதிலு போட்டிட்டான் இனி நான் குளிக்க மாட்டன் என்று யாரும் அடம் பிடித்தால் அடியேன் பொறுப்பல்ல}

இயற்கையின் சீற்றம் உக்கிரம் பெறும் என்பதற்கு “பெங் சுயி” தேவையில்லை.உலகம் வல்லாதிக்க போட்டியில் கொதித்துள்ளது போயிருக்கின்றது.ஆட்டிக் பனிப்பாறைகளின் உருகுதல் வேகம் அதிகரித்துள்ளது இதன் தாக்கம் இயற்கையின் சீற்றங்களாகாமல் என்னவாகும் ?
புவி வெப்பமடைதலில் ,சுற்றுச் சூழல் மாசடைதலில் சீனரின் பங்கு அனைவரும் அறிந்ததே.பூமிப் பாதுகாப்பு இயக்கங்கள் சீனாவில் ஒலிம்பிக் போட்டியை தடை செய்யுமாறு நடத்திய போராட்டங்கள் மறக்க முடியாதவை.

தனது அசுர வளர்ச்சிக்காக எல்லா நாடுகளும் இயற்கையை அழித்தே வருகின்றன.எனினும் சீனா தனது பெரும் பரப்பளவு மற்றும் சனத்தொகைக்கு அமைவாக அதில் முன்னிலை வகிக்கின்றது.எலி வருடம் காரணமாக உலகின் பதற்ற நிலை இந்த வருடம் முழுவதும் தொடர்ந்து கொண்டே இருக்குமாம்.

இந்த பதிவை தட்டச்சிக் கொண்டிருக்கும் போது புதுவருட தினத்திலும் இஸ்ரேல் காசாவில் நடத்திய தாக்குதல்கள் தொடர்பான தொகுப்பு தொலைக்காட்சி திரையில் ஓடிக்கொண்டிருக்கின்றது..

ஆதிக்க சக்திகளும் அவற்றின் மேய்ப்பர்களும் இருக்கும் வரை நானும் கூட சாத்திரம் சொல்லுவேன் உலகின் பதற்றம் பற்றி .

மிருக வருட ஒழுக்கின் ஆரம்பம் தான் “எலி”வருடம் எலியில் தொடங்கி பன்றியில் முடியும் ஒழுக்கின் ஆரம்பமாக இந்த வருடம் அமைந்துள்ளதால் உலகில் பல மாற்றங்கள் நிகழும் என்றும் அதன் அடிப்படையிலேயே அமெரிக்க ஜனாதிபதியாக ஒபாமா தெரிவுசெய்யப்பட்டுள்ளதாகவும் பெங் சுயி வல்லுனரான ரேமண்ட் லோ கூறியுள்ளார்.

எனினும் சீனாவை பொறுத்த வரை வரலாற்றில் மிக முக்கிய வருடமாக இந்த வருடம் அமையும் என்றும் லோ சட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த வருடம் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளுடன் ஆரம்பித்துள்ள சீனாவின் பொருளாதார வளர்ச்சி இந்த “எலி”வருடத்தில் வரலாறு காணத உச்சத்தை அடையம் என்று அவர் எதிர்வு கூறியுள்ளார்.

எலிகாச்சலுக்கு இந்த ஆண்டாவது மருந்து கண்டு பிடிப்பார்களா என்று இங்கே ஏழை விவசாயி கேட்கும் கேள்வி யார் பதில் சொல்வது ?
அப்பாட புதுவருடத்தில் ஓருமாதிரி பதிவு போட்டுட்டன் இனி சந்தோ…..சமா நித்திரை கொள்ளலாம்

Comments

சீனர்களிடமும் மூட நம்பிக்கைகள் தாரளமாக உண்டு..Mid autumn festival எனப்படும் பேய்கள் திருவிழா எல்லாம் நடத்துவார்கள்..முன்னோர்களுக்கு காசு (போலி தான்)எல்லாம் எரிப்பதன் மூலம் அனுப்புவார்கள்

உங்களுக்கு என் இனிய புது வருட வாழ்த்துகள்
/
ஐயோ இந்த வருடம் தண்ணியில கண்ணடம் என்று ரமணன் பதிலு போட்டிட்டான் இனி நான் குளிக்க மாட்டன் என்று யாரும் அடம் பிடித்தால் அடியேன் பொறுப்பல்ல
/

:)))))
சீனாவின் பிரச்சிளையை விடுங்கோவன்.
நம்ம நாடு என்ன பாடு படப்போகுது என்டு சீனா சத்திரிமாரிடம் கேட்டு செல்லச் சொல்லுங்கோவன்..

Popular posts from this blog

முகம் தந்த மனிதருக்கு நன்றிகளுடன்...

கடந்து செல்லும் காலங்களில் நாங்கள் பல முகங்களை மறந்து விடுகின்றோம் அல்லது அந்த முகங்கள் எங்கள் மனங்களில் இருந்து விலகிச் சென்றுவிடுகின்றன.

எங்கள் வளர்ச்சியிலும், உயர்ச்சியிலும் பங்கெடுத்த முகங்களும் கால ஓட்டத்தில் எங்கள் மனங்களில் இருந்து காணமால் போய் விடும் துயரங்களும் நிகழ்வாகின்றன.நான் ஒலிபரப்புத் துறையில் எதனையும் பெரிதாக சாதிக்கவில்லை என்பது எனக்கு நன்றாகவே தெரியும்.

எனினும் வானொலி நிகழ்சிகளின் போதோ சந்திப்புகளின் போதோ சிலர் எனது ஒலிபரப்பு குறித்து தெரிவிக்கும் பாராட்டுகள் என்னை குற்ற  உணர்ச்சி கொள்ளச் செய்கின்றன.

இந்த பாராட்டுகளையும் வாழ்துக்களையும் எனக்கான அடையாளத்தையும் ஏற்படுத்தி தந்து விட்டு மௌனமாக கடந்து போகின்ற அந்த ஓரு மனிதர் குறித்து நான் என்ன செய்யப் போகின்றேன் என்ற கேள்வி எழுந்து கொண்டே இருக்கின்றது.

எனக்கு கிடைக்கும் பாராட்டுகளுக்கும் வாழத்துகளுக்கும் முழு முதல் காரணமானவர் அவர்.

கால ஓட்டத்தில் அவரின் முகம் சில வேளைகளில் எங்கள் மத்தியில் இருந்து மறந்து போகலாம் ஆனால் அவர் ஏற்படுத்தி விட்டுள்ள வானொலிக் கலாசாரம் என்றும் அவரின் பெயரை உரத்துச் சொல்லியவாறே இருக்கும் என்று …

சீன டிரகனிற்கு உணவாகும் கனேடிய புளுபெரி !!!

பிரேசில் நாட்டில் பறந்து கொண்டிருக்கும் ஒரு வண்ணத்துப் பூச்சியின் சிறகின் படபடப்பினால் ஏற்படும் சலசலப்பிற்கும், டெக்ஸாசில் ஏற்படும் சூறாவளிக்கும் தொடர்பு உண்டு" என்று வண்ணத்துப் பூச்சி விளைவு' (Butterfly effect) என்ற கோட்பாட்டை உருவாக்கிய'எட்வார்ட் லோரன்ஸ்' (Edward Lorenz) கூறினார்.

 இது உலக அரசியல் மாற்றங்களுக்கு மிகப் பொருத்தமான கோட்பாடாக கருதப்படுகின்றது. ஆசியப்பிராந்தியத்தின் வல்லாதிக்கப் போட்டியில் ஈடுபட்டுள்ள இருநாடுகள் தமக்கிடையிலான நெருக்கத்தை அதிகரிக்கும் போது மேற்குலகம் அதன் பிரதிபலிப்பை எவ்வாறு வெளிப்படுத்த் போகின்றது. என்ற எதிர்பார்ப்பு கடந்த சில வாரங்களாகவே அரசியல் அவதானிகள் மத்தியில் தோற்றம் பெற்றிருந்தது. குறிப்பாக சீனாவுடன் நெருக்கமான உறவைக் கொண்டுள்ள நரேந்திர தாமோதரதாஸ் மோடி இந்தியாவின்15வது பிரதமராக பதவியேற்ற பின்னர் மேற்குலகின் வெளியுறவுக் கொள்கைகளில் தீடீர் மாற்றங்கள் எதிர்பார்க்கப்பட்டன.

ஆனால் அதில் ஏனைய நாடுகளை பின்தள்ளி சீனாவுடனான புதிய உறவிற்கு அதிக முனைப்புக் காட்டியிருக்கின்றது கனடாவின் ஹாபர் அரசாங்கம். கனேடிய பிரதமரின் சீன விஜயத்தின் போ…

ஒரு துவக்கும் ஒரு மோதிரமும் - A Gun and a Ring

ஒரு துவக்கும் ஒரு மோதிரமும் என்று பெயர் வைப்பதற்கு தான் அவர்கள் முதலில் யோசித்தார்கள் பின்னர் அது ஆங்கில வடிவம் பெற்று இன்று  A Gun and a Ring   ஆக எங்கள் முன் காட்சிப்படுத்தபபட்டுள்ளது.கடந்த சனிக்கிழமை இரவு இந்த திரைப்படத்தின் முன்னோட்டக்காட்சியினை காணும் சந்தர்ப்பம் எனக்கும் கிடைத்தது.
சீனாவில் நடைபெற்ற திரைப்பட விழாவிலும் மொன்ரியல் திரைப்பட விழாவிலும் சிறந்த திரைப்படம் என்ற அடையாளத்தை பெற்றிருக்கும் இந்த திரைப்படம் பெருமளவான எதிர்பார்பை ஏற்படுத்தி விட்டுள்ளதை அரங்கில் திரண்டிருந்த இரசிகர்களின் எண்ணிக்கை புலப்படுத்தியது.

நம்வர்கள் படைப்புகள் என்றாலே தூர விலகி ஓடும் நம்மவர்களே நான்கு அரங்குகளிலும் இதன் முதல் காட்சியை பார்க்கும் ஆவலோடு காத்திருந்தமை ஆரோக்கியமான மாற்றத்தின் அறிகுறி.

அந்த ஆவலை எந்த வகையிலும் பாதிக்காத படைப்பாக அது அமைந்திருந்தது மகிழ்ச்சிக்குரியது.

80 களில் ஆரம்பித்த தமிழ் மக்களின் விடுதலைக்கான ஆயுதப் போராட்டம் 2009 ல் முடிவிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இதனை ஒரு தகவலாக அல்லது செய்தியாக மாற்றினங்கள் கடந்து போகக் கூடும் ஆனால் இந்த மூன்று தசாப்பதங்களையும் யுத்த முனைகளிலும் …