Skip to main content

சத்தம் இன்றி ஒரு புரட்சி – பரியோவான் கல்லூரி சாதனைகளின் சிகரத்தில்


இலங்கையில் நடைபெற்று முடிந்த யுத்தம் ஏற்படுத்தி நிற்கும் காயங்கள் ஆறுவதற்கு காலங்கள் பலவாகும்.

யுத்தத்தை நேரடியாக தரிசித்த சுமார் மூன்று இலட்சம் உறவுகளிடம் சொல்வதற்கு கதைகள் ஏராளம் இருக்கும் அவை காலத்தின் காதுகளில் எப்போது சொல்லி வைக்கப்படும் என்பது உங்களை போலவே எனக்கும் தெரியாதது தான்…

ஆனால் இழப்புகளில் இருந்து மீண்டெழும் மந்திர வித்தை தெரிந்தவர்கள் நாங்கள்.எங்களை சுற்றியுள்ள தடைகள் தகரும் போது நாங்கள் இழந்த வாழ்வை மீண்டும் பெறமுடியும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கைகள் எங்களிடம் நிறையே உண்டு.

அதுவரைக்கும் உடலிலும் உள்ளத்திலும் ஏற்பட்ட காயங்களுக்கு மருந்தாக வேண்டியது எங்களின் கட்டாய கடமை.

இது அது போன்ற ஒரு காயத்திற்கு மருந்தாகும் முயற்ச்சி பற்றியதான கதை தான் இது.
யாழ்ப்பாணத்தின் கல்வி சமூகத்தின் வளர்ச்சியல் தவிர்க்க முயடிhத அங்கங்களில் ஒன்று புனித பரியோவான் கல்லூரி.

யாழ்ப்பாணத்தில் இயங்கும் தனியார் பாடசாலைகளில் மிக முக்கியமானது இந்த கல்லூரி.

தேசங்கள் தாண்டியும் தமிழர்களின் திறமைகள் பரவும் வழி வகை செய்து நிறகின்றது இந்த பாடசாலை.

ஆளுமை மிக்க மனிதர்களை உற்பத்தி செய்தும் ஒரு உற்பத்தி சாலை என்று இதனை குறிப்பிட முடியும். கல்விக் கூடம் என்பதற்கும் அப்பால் ஒரு மாணவனை மனிதனாக்கும் சிறப்பு வித்தை தெரிந்த கல்லூரி இது.

யாழ் குடாநாட்டை தாக்கிய யுத்தங்களில் மிக மோசமாக பாதிக்கப்பட்ட அனுபம் இந்த கல்லூரிக்கும் உண்டு.

குண்டுகள் வீழ்ந்து சிதைந்து போன கட்டிடங்களின் நடுவில் இருந்து பீனிக்ஸ் பறவையாய் இது எழுந்து வந்தது வரலாறு.

அதிபர் ஆனந்தராஜா மாணவர் தலைவன் அகிலன் எனது நண்பன் சுகந்தன் என சுடுகலன்கள் துப்பிய வெப்பச் சன்னங்களில் உயிர் விலை கொடுத்தும் இருக்கின்றது எங்கள் கல்லூரி
காலங்களும் கட்சிகளும் காட்சிகளும் வேறு வேறான போதும் இழப்புகள் இழப்புகள் தானே.

1823ம் ஆண்டு உருவாக்கப்பட்டு இன்று வரை தனக்கான கம்பீரத்தோடு நிமிர்ந்து நிற்கும் இந்த முன்மாதிரிகளின் முன்னோடி இப்போது காலத்தின் தேவையுணர்ந்து மற்றுமொரு புரட்சியினையும் சத்தமின்றி செய்துள்ளது.

ஆம் யுத்தம் பிய்த்து வீசிய எங்கள் எதிர்கால சந்ததியினருக்கான கல்வி செல்வத்தை தடையின்றி வழங்கும் சிறப்பு திட்டம் தான் அது.


யுத்தத்தால் பாதிக்கப்பட்ட எங்கள் உறவுகள் தமது கல்வியை தொடர்வதற்கு வாசல் திறந்துள்ளது பரியோவான் கல்லூரி.வன்னியில் இருந்த இடம்பெயர்ந்து முட்கம்பி வேலிக்குள் முகம் தொலைத்த எங்கள் உறவுகள் தாம் வாழ்ந்த தங்களின் சொந்த மண்ணிற்கு மீளத் திரும்பும் போது அவர்கள் எதிர்பார்த்தது போல் மீண்டும் வாழ்வதற்கான ஏது நிலைகளை அவர்களின் சொந்த மண்ணும் அந்த மண்ணின் மக்களும் ஏற்படுத்தவில்லை என்பது கசப்பான உண்மை

குறிப்பாக மீளத் திரும்பும் மாணவர்களை பாடசாலைகளில் இணைப்பதில் குடாநாட்டின் அரச பாடசாலைகள் காண்பித்த அக்கறையீனங்கள் கண்டிப்பிற்குரியவை.

எத்தனையோ தலையீடுகள் அறிக்கைகள் எச்சரிக்கைகள் தாண்டி தான் இடம்பெயர்ந்த மாணவர்கள் மீண்டும் தமது கல்வியை தொடரும் நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இலவச கல்வியை வழங்க வேண்டிய அரசாங்க பாடசாலைகள் வெளிப்படுத்தாத அக்கறையை தனியார் பாடசாலையான பரியோவான் கல்லூரி காண்பித்த நிற்பது வரவேற்பிற்குரியது.
வன்னியில் இருந்து குடாநாடு திரும்பியுள்ள ஏறத்தாள 150 மாணவர்களை தனது மடிசாய்திருக்கிறது பரியோவான்.

இவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கான அனைத்து செலவுகளையும் பாடசாலை நிர்வாகம் ஏற்றுக் கொண்டுள்ளது.சதாரணமான காலங்களில் பரியோவானில் அனுமதி பெறுவது என்பது பலருக்கும் எட்டாக்கனியாகவே இருந்து வந்ததை எவரும் மறுதலிக்க முடியாது ,ஆனால் இன்று காலத்தின் தேவை அறிந்து யுத்தம் பறிந்த கல்வியை மீண்டும் தர முன் வந்திருக்கின்றது பரியோவான் கல்லூரி.

வன்னியில் இருந்து இடம்பெயர்ந்த மாணவர்கள் தங்கியிருந்து கல்வி கற்பதற்கான தங்குமிட வசதி அவர்களுக்கான உணவு உடை கற்றல் உபகரணங்கள் என அனைத்துச் செலவீனங்களையும் கல்லூரி நிர்வாகம் ஏற்று புதிய பாதை ஒன்றை ஏற்படுத்திக் கொடுத்துள்ளத

இந்த 150 மாணவர்களில் 30 பேர் தாய் தந்தை இருவரையும் யுத்தத்திற்கு விலை கொடுத்தவர்கள் என்பது குறிப்பிடப்பட வேண்டிய முக்கியமான விடயம்.

இவர்கள் உயர்தரம் வரை கல்வி கற்பதற்கு அனைத்து வசதிகளும் வழங்கப்படும் என்று பாடசாலை அதிபர் வணக்கத்திற்குரிய ஞானப்பொன்ராஜா அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்படும் பட்சத்தில் பல்கலைக்கழக கல்வியை தொடர்வதற்கும் உதவிகளை வழங்கவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இதேவேளை வவுனியாவில் இருந்த மேலும் ஒரு தொகுதி மாணவர்களை அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்லூரியில் பாதிக்கப்பட்டுள்ள ஏனைய விடுதிகள் மற்றும் வகுப்பறைகள் என்பன திருத்தி அமைக்கப்பட்டால் இது போல் மேலும் பல மாணவர்களை உள்வாங்க முடியும் என்றும் ஆர்வலர்கள் அதற்கு உதவிகளை முன்வந்து வழங்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளத

பரியோவான் கல்லூரியின் இந்த செயற்பாட்டிற்கு கல்லூரி பழைய மாணவர் சங்கங்கள் பலவும் ஒத்துழைப்புகளை வழங்கி வருகின்றன.

இது ஒரு சமூக மாற்றத்திற்கான முதற்படி அனைவரும் சேர்ந்து வடம் பிடித்தால் தேர் நகரும்..யுத்தம் பறித்தவற்றில் சிலவற்றையேனும் நாங்கள் எங்கள் உறவுகளுக்கு வழங்கலாம்.

Comments

அசாதி said…
ஒரு விவாதத்திற்காக என் வலைப்பக்கத்தில் உள்ள ஈழம் தொடர்பான கட்டுரையைப் படித்துவிட்டு கருத்து சொல்லவும்.
Anonymous said…
Johnians always play the game :)
hats off St.Johns college and the principal Rev Gnanaponrajah
தாய் தந்தை இருவரையும் யுத்தத்திற்கு விலை கொடுத்த 30 பேர் உட்பட 150 மாணவர்களுக்கு கல்வி வசதியளிக்க முன்வந்த புனித பரியோவான் கல்லூரிக்கும், அதிபர் வணக்கத்திற்குரிய ஞானப்பொன்ராஜா அவர்களும் பாராட்டுக்குரியவர்கள். தகவலுக்கு நன்றி
பரியோவான் நிர்வாகத்துக்கு என் பாராட்டுக்கள்...நானும் பரியோவான் பழைய மாணவன் தான்..
Anonymous said…
its a good attempt principal sir hats off
Anonymous said…
Hi Ramanan,
This project was created by the SJC 87 batch.Later the school adopted it to get more funds from the other batches.all this is funded by the aluminai and not the school.
Also now I hear that religion of the child has played a major role in the selection and many of the original aluminai who set the original criteria are not happy.
SANJEEBAN said…
Hai raman anna iam looking for your web.it's super
Please look for sanjeeban.blogspot.com

Popular posts from this blog

சீன டிரகனிற்கு உணவாகும் கனேடிய புளுபெரி !!!

பிரேசில் நாட்டில் பறந்து கொண்டிருக்கும் ஒரு வண்ணத்துப் பூச்சியின் சிறகின் படபடப்பினால் ஏற்படும் சலசலப்பிற்கும், டெக்ஸாசில் ஏற்படும் சூறாவளிக்கும் தொடர்பு உண்டு" என்று வண்ணத்துப் பூச்சி விளைவு' (Butterfly effect) என்ற கோட்பாட்டை உருவாக்கிய'எட்வார்ட் லோரன்ஸ்' (Edward Lorenz) கூறினார்.

 இது உலக அரசியல் மாற்றங்களுக்கு மிகப் பொருத்தமான கோட்பாடாக கருதப்படுகின்றது. ஆசியப்பிராந்தியத்தின் வல்லாதிக்கப் போட்டியில் ஈடுபட்டுள்ள இருநாடுகள் தமக்கிடையிலான நெருக்கத்தை அதிகரிக்கும் போது மேற்குலகம் அதன் பிரதிபலிப்பை எவ்வாறு வெளிப்படுத்த் போகின்றது. என்ற எதிர்பார்ப்பு கடந்த சில வாரங்களாகவே அரசியல் அவதானிகள் மத்தியில் தோற்றம் பெற்றிருந்தது. குறிப்பாக சீனாவுடன் நெருக்கமான உறவைக் கொண்டுள்ள நரேந்திர தாமோதரதாஸ் மோடி இந்தியாவின்15வது பிரதமராக பதவியேற்ற பின்னர் மேற்குலகின் வெளியுறவுக் கொள்கைகளில் தீடீர் மாற்றங்கள் எதிர்பார்க்கப்பட்டன.

ஆனால் அதில் ஏனைய நாடுகளை பின்தள்ளி சீனாவுடனான புதிய உறவிற்கு அதிக முனைப்புக் காட்டியிருக்கின்றது கனடாவின் ஹாபர் அரசாங்கம். கனேடிய பிரதமரின் சீன விஜயத்தின் போ…

எங்களை கைவிட்டு காலம் ஒடிக்கொண்டிருக்கின்றது !

2009 பேரவலத்தின் முடிவில் ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்னர் தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டம் வேறு தளங்களுக்கு நகர்த்தப்பட வேண்டிய நிலை உருவானது. ஆயுதப் போராட்டங்களின் மூலமாக தனி நாடு உருவாக முடியும் என்ற சித்தாந்தம் மாற்றமடைந்திருக்கும் அல்லது மாற்றியமைக்கப்பட்டிருக்கும் உலக நடைமுறையினை நாங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டிய நிலை உருவாக்கப்பட்டுள்ளது. ஆனாலும் கடந்த மூன்று தசாப்தகால போராட்டத்தில் எமக்கான தேசம் என்ற ஒற்றை இலக்கிற்காய் மடிந்து போனவர்களின் கனவுகளை அப்படியே தூக்கி எறிந்து விட்டு நாம் சென்று விட முடியாது. 2009 ற்கு முன்னர் விடுதலைப் போரின் ஆதரவுத் தளமாக இருந்த புலம்பெயர் தமிழர்கள் 2009 ற்கு பின்னர் விடுதலைக்கான முனைப்புகளின் முன்னிலைப் படுத்தப்படுத்தப்பட்டுள்ளார்கள். ஆதனால் தான் புலம் பெயர் தமிழர்களின் ஒற்றுமையை சிதைப்பதற்கும் அது சார்ந்த மக்களின் நம்பிக்கைகளை குலைப்பதற்கும் ஸ்ரீலங்கா அரசு கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகின்றது. ஆயுதப் போராட்டம் ஏற்படுத்த முடியாத நீண்டகால பேரழிவுகளை புலம் பெயர் தமிழர்களால் ஏற்படுத்த முடியும் என்று ஸ்ரீலங்கா அரசு நம்புகின்றது …

நான் .. ஊடகம் .... இன்னும் சில...

இது எனது 50வது பதிவு, மிக மிக நீண்ட கால இடைவேளைகளை எனது பதிவுகள் எடுத்துக் கொள்வதால் சுமார் மூன்று வருடங்களில் என்னால் 50 பதிவுகளையே எழுதி கிழிக்க முடிந்துள்ளது. இந்த பதிவு என்னை பற்றியதும் எனது ஊடகப் பயணம் பற்றியதும் மட்டுமே.

99ம் ஆண்டு முழு நேர ஒலிபரப்பு ஊடகவியலாளனாய் எனது பயணம் ஆரம்பித்தது. 12 வருடங்கள் ஊடகப்பரப்பில் வெவ்வேறு தளங்களில் பயணித்திருக்கின்றேன். ஒலிபரப்பளான், செய்தியாளன், விளம்பரப் பிரதி எழுத்தாளன், பத்திரிகை உதவி ஆசிரியர், செய்திப் பணிப்பாளர், நவீன ஊடக முகாமையாளர் என வெவ்வேறு பணிகளில் ,பணிச் சூழல்களில் இயங்கி வந்துள்ளேன்.

இந்த பயணம் நானாகவே விரும்பி ஏற்றுக் கொண்ட பயணம். துயரங்கள், துரோகங்கள், காட்டிக் கொடுப்புகள் கழுத்தறுப்புகள் என பல முனைக்கத்திகள் குத்திக் கிழிக்க காத்திருக்கும் ஊடகத்துறையில் நான் எவரையும் எந்த சந்தர்ப்பத்திலும் எதற்காகவும் காயப்படுத்தாமல் முன் நகர்ந்திருக்கின்றேன் என்பதையே பெருமையாகவும் மகிழ்வாகவும் கருதுகின்றேன். சில சந்தரப்பங்களில் சந்தர்ப்பவாதங்கள் என்னை பந்தாடிய போதும் என்னால் எவரும் பாதிக்கப்படக் கூடாது என்ற கொள்கையில் மாற்றமின்றி நிலைத்திரு…